ADMK PMK: 6 மாதங்களுக்கு பிறகு 14ஆம் தேதி கூடிய சட்டசபை 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் 3 வது நாளாக இன்று கூடிய சட்டசபையில் பாமகவை சேர்ந்த அன்புமணி ஆதரவு எம். எல். ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். பாமக சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே. மணி மற்றும் கொறடா அருளை மாற்ற அன்புமணி தரப்பு கோரிக்கை விடுத்த நிலையிலும், சபாநாயகர் அதை ஏற்காததால் மீண்டும் அதனை வலியுறுத்தும் விதமாக கருப்பு சட்டை அணிந்து வந்ததாக அவர்கள் கூறினார்கள்.
இதனை தொடர்ந்து பாமக எம். எல். ஏக்கள் 3 பேர் சட்டசபை வளாகத்தில் தர்ணாவிழும் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பேரவை தலைவர் இந்த பிரச்சனையை பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று கூறினார். நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அதிமுகவினர் கையில் கருப்பு பட்டை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும், அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கும் வகையிலும் இந்த செயல் அரங்கேறியதாக அதிமுகவினர் கூறினார். இதனை கண்ட சபாநாயகர் அப்பாவு ரத்த கொதிப்பா என்று கிண்டலடித்தார். அதிமுகவினரை தொடர்ந்து பாமகவினரும் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. பாமகவின் எதிர்க்கட்சிகள் அதிமுகவினரை பார்த்து பாமகவினர் காப்பி அடிப்பதாகவும் கூறுகின்றனர்.