
ADMK BJP: அதிமுகவில் ஜெயலலிதா மறைந்தலிலிருந்தே கட்சியின் நிலைப்பாடு சரியில்லை என அதிமுகவை சேர்ந்தவர்களே கூறியுள்ளனர். ஜெயலலிதாவிற்கு பிறகு முதல்வர் பதவியை ஏற்ற எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைக்கு செவி சாய்க்கலாம் தான்தோன்றி தனமாக செயல்படுவதாக பலரும் குறை கூறி வந்தனர். இந்நிலையில் இபிஎஸ் பதவியேற்ற பிறகு அதிமுக எந்த தேர்தலிலும் வெல்லாமல் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தது.
இந்த தோல்வி மக்களுக்கு அதிமுகவின் மேலிருந்த நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருவதை வெளிப்படுத்தியது. இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டுமென இபிஎஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக மத்திய அரசான பாஜகவுடன் கூட்டணியும் அமைத்து விட்டார். இதனை தொடர்ந்து தவெக உடனும் கூட்டணி வைக்க முயன்று வருகிறார்.
ஆனால் விஜய் பாஜக உறவை முறிந்தால் தான் கூட்டணி முடிவு செய்யப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது அதிமுகவிற்கு சிறிதளவு பாதகமாக இருந்தாலும், பாஜகவிற்கு பேரிடியாக உள்ளது. ஏனென்றால், பாஜக கூட்டணியில் விஜய் இணைய மறுத்து விட்டார். இந்நிலையில், அதிமுகவும் கூட்டணியிலிருந்து விலகினால் பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலை ஏற்படும்.
இந்த காரணத்தினால் தான் செங்கோட் டையனை பதிவிலிருந்து நீக்கிய போது கூட அவரை மீண்டும் இணைக்க சொல்லி பாஜக வற்புறுத்தவில்லை. மேலும், டிடிவி தினகரன் வெளியேறும் போது கூட அமித்ஷா எந்த வித கருத்தும் கூறாமல் இருந்தார். இதையெல்லாம் வைத்து பார்த்தால் அதிமுக பாஜகவிலிருந்து கை நழுவி விடுமோ என்ற அச்சத்தில் செய்வதாக தெரிகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.