இது சரி பட்டு வராது.. இவங்க கிட்ட பேச ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது தான்.. இபிஎஸ்யின் அடுத்த நகர்வு!!

0
506
This will not be fixed.. We need to start talking to them.. EPS's next move!!
This will not be fixed.. We need to start talking to them.. EPS's next move!!

ADMK: அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில் இவ்விரண்டு கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. ஆனால் தலைவர் விஜய் தனது கொள்கை எதிரியான பாஜக உடன் கூட்டணி வைக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். அதிமுக உடன் கூட்டணி வைக்க அவருக்கு சம்மதம் போல தான் தெரிகிறது ஆனால் அக்கட்சி பாஜக உடன் கூட்டணியில் இருப்பதால், அதிலிருந்து வெளியேற வேண்டுமென விஜய் இபிஎஸ்க்கு நிபந்தனை விதித்துள்ளார்.

ஆனால் அதிமுக-பாஜக உடனான கூட்டணி பல்வேறு சச்சரவுக்கு பிறகு இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளதால் இபிஎஸ் இதனை மறுத்துள்ளார். இதனால் விஜய் அதிமுக கூட்டணிக்கு வரமாட்டார் என்பது உறுதியான நிலையில் இபிஎஸ், தேமுதிக, பாமக உடன் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளார். விஜய் தனித்து போட்டியிட்டு அவருக்கான வாக்கு வங்கியை பிரித்தாலும், தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் திமுக பக்கம் செல்ல கூடாது என்பதில் இபிஎஸ் உறுதியாக இருக்கிறார்.

அதிமுகவிலிருந்து பிரிந்த கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து திராவிட வாக்கு வங்கியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. இதனை தொடர்ந்து, இந்த இரண்டு கட்சிகளுடனும் திரைமறைவில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு தேமுதிக 8 எம்.எல்.எ.க்கள் மற்றும் அதிகளவு தொகுதிகளை கேட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் பாமக நிறுவனர் ராமதாஸும் அதிக நிபந்தனைகளை முன்வைத்ததாக தெரிகிறது.

Previous articleகடைசி வரைக்கும் தமிழ் நாட்டுக்குள்ள வர முடியாது போலயே.. கைநழுவும் அதிமுக.. அச்சத்தில் அமைதி காக்கும் அமித்ஷா!!
Next articleவிஜய்க்கு ஆதரவு இல்லை.. நயினாரின் விளக்கத்தால் புதிய சர்ச்சை!!