விஜய்க்கு ஆதரவு இல்லை.. நயினாரின் விளக்கத்தால் புதிய சர்ச்சை!!

0
286
No support for Vijay..New controversy due to Nainar's explanation!!
No support for Vijay..New controversy due to Nainar's explanation!!

BJP: தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, அதிமுக சார்பில் நயினார் நாகேந்திரன் பேசிய விதம் புதிய அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திமுகவினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்காக நாங்கள் பேசவில்லை. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்காக தான் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். இதில் அரசியல் கூட்டணி எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

ஆனால் இதற்கு முன்பு, கரூர் நிகழ்வுக்குப் பிறகு நயினார் நாகேந்திரன் விஜய்க்கு வெளிப்படையாக, ஆதரவாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர், அந்த துயரச் சம்பவம் அரசின் பாதுகாப்பு குறைவினால் ஏற்பட்டது. விஜய்யை குற்றம் கூறுவது சரியல்ல என்று கூறியிருந்தார். மேலும் விஜய் கரூருக்கு சென்றால் 41 பேர் அடித்து கொல்லப்பட்டது போல விஜய்க்கும்  நடக்கும் என்று அவருக்கு ஆதரவாக பேசினார். அவரின் அப்போதைய கூற்று மற்றும் தற்போதைய விளக்கம் இடையே முரண்பாடு காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் விமர்சிக்கின்றன.

இதன் மூலம், விஜய்யை அதிமுக கூட்டணிக்குள் சேர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே நயினார் நாகேந்திரனின் பேச்சு இருக்கலாம் என கருதுகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இடையே கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நயினாரின் சமீபத்திய விளக்கம், இந்த கூட்டணி யூகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளதாக மதிப்பிடுகிறது. 

Previous articleஇது சரி பட்டு வராது.. இவங்க கிட்ட பேச ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது தான்.. இபிஎஸ்யின் அடுத்த நகர்வு!!
Next articleஇரத்த கொதிப்பா.. சபாநாயகரின் தரக்குறைவான பேச்சுக்கு இபிஎஸ் தகுந்த பதிலடி!!