ADMK: அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அவர், என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று கூறி அம்மா சமாதியின் முன் அமர்ந்து தியானம் செய்தார். இதனையடுத்து இபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஓபிஎஸ்க்கும், இபிஎஸ்க்கும் இடையில் சின்னம் தொடர்பான பிரச்சனை வந்தது.
இதற்கு தீர்ப்பு வழங்கிய தேர்தல் ஆணையம் இச்சின்னம் இபிஎஸ் அணிக்கு தான் என்று தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சச்சரவு நடைபெற்று வர இபிஎஸ் பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினார். இதனால் அதிர்த்தமடைந்த பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அவரது ஆதரவாளர்கள் ஆதரவோடு தொடங்கினார். அப்போது பாஜகவில் இணைந்திருந்த அவர், நயினாரின் செயல்பாடுகள் பிடிக்காததால் கூட்டணியிலிருந்து விலகினார்.
இந்நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் உடன் கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது புதிய திருப்பமாக ஓபிஎஸ், ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். இவர்களின் சந்திப்பின் போது ஓபிஎஸ் யின் மகன் ரவிதாரநாத்தும் உடனிருந்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும் இதற்கு பின்னாலும் அரசியல் ஒளிந்திருக்கிறது.
இதற்கு முன் அண்ணாமலையும் ஒரு முறை ரஜினியை சந்தித்து பேசினார். அது குறித்து அவரிடம் கேட்ட போது, ரஜினி சாரை அடிக்கடி சந்திப்பேன். மதத்திற்கு 2 அல்லது 3 முறை சந்தித்து பேசுவேன். இது வெறும் ஆத்மார்த்தமான சந்திப்பு தான். இதனை யாரும் அரசியலோடு முடிச்சு போட வேண்டாம் வேண்டும் கூறியிருந்தார். இந்நிலையில் ஓபிஎஸ்யின் இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் முடிவு என்னவாக இருக்கும். இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்த செயல்படுவார்களா, இல்லை இவர்களுடன் டிடிவி தினகரன் இணைவாரா என்ற பல கேள்விகள் அரசியல் காலத்தில் எழுந்துள்ளது.