தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் பொதுவாக ஆந்தை அலறினால் அது கெட்ட சகுனம் ஆகும் யாரோ ஒருவர் இறக்கப் போகிறார் என்றும் தான் நம்புகிறோம்.ஏன் ஆந்தை அலறல் சத்தம் கேட்டாலே சில பேர் பயந்து போவார்கள்.ஆனால் வட மாநிலத்தினரோ ஆந்தை அலறல் சத்தம் கேட்டால் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையும் போன்றவை அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.வடமாநிலத்தவர் நம்பும் ஆந்தை அலறுதல் சகுனத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தீபாவளி தினத்தன்று இரவில் எவர் வீட்டுக்கேனும் ஆந்தை வந்து குரல் எழும்பினால் மிக மிக சுபச் சகுனமாக வட மாநிலத்தவர்கள் கருதுகின்றனர்.
மற்ற நாட்களில் வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது ஆந்தை கண்ணில் தென்பட்டால், போகும் காரியத்தில் நிச்சயம் வெற்றி எனத் தீர்மானமாக வட மாநிலத்தவர்கள் கூறுகின்றனர்.
சாதாரண நாட்களிலும் இரவில் ஒரு வீட்டில் ஆந்தை வந்து அமர்ந்து ஓயாது குரல் எழுப்பினால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு விரைவில் பொருளாதார ரீதியில் அதிர்ஷ்டம் வரும் என்பது அவர்களின் உறுதியான நம்பிக்க ஆகும்.
அப்படி வந்து அமரும் ஆந்தை குரல் எழுப்பாமல் அமைதி காத்தால் மிகவும் சங்கடப்படுவார்களாம் வடமாநிலத்தினர்.
ஒரு வீட்டுக்கு வந்த ஆந்தை அங்கேயே கூடு கட்டி வசிக்கத் தொடங்கி, இரவு பகலாகக் குரல் கொடுத்தால் அல்லது அவ்வீட்டின் எல்லைக்குள் உள்ள கோவிலில் இப்படி நிகழ்ந்தாலும் அந்தப் பகுதிவாழ் மக்களுக்கு லட்சுமி கடாட்சம் நிச்சயம் உண்டு என்று ஆணித்தரமாக நம்புகின்றனர் அம்மக்கள்.
இனி ஆந்தை அலறினால் பயந்து அதை விரட்டாமல் அந்த சகுனத்தை நாமும் சோதித்து பார்ப்போம் மக்களே.