DMK: தமிழகத்தில் ஆவண படுகொலைக்கு எதிராக ஒரு தனி சட்டம் இயற்ற வேண்டிய அளவுக்கு சாதி வெறி வேரூன்றியுள்ளது என்றே சொல்லலாம். இளவரசன் தொடங்கி கவின் குமார் வரை சாதி கொடுமைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இதனை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டுமென பலரும் கூறி வந்த நிலையில், இன்று சட்ட சபையில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் சட்டசபை கூட்டம் கூடியுள்ளது. 6 மாதங்களுக்கு பிறகு கூடிய இந்த கூட்டம் சபா நாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 14 ஆம் தேதியை தொடங்கிய சட்டசபை 17 ஆம் தேதி வரை அதாவது நான்கு நாட்கள் நடைபெறும் என சபா நாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இந்நிலையில் நான்காவது நாளான இன்று சட்டசபை கூடியது அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆவண படுகொலையை தடுக்க தனி சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சில சம்பவங்ககள் சமுதாயத்தை தலை குனிய செய்கிறது. ஆவண படுகொலைக்கு காரணம் சாதி மட்டும் அல்ல. எதற்காக நடந்தாலும் கொலை கொலை தான். அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும். சாதி ஆவண படுகொலையை தடுப்பதற்கு, தனி சட்டம் உருவாக்குவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி பாட்ஷா தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.