யாருமே வேண்டாம்.. ஆள விடுங்க.. விஜய்யின் இறுதி முடிவு.. ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்டா இருக்கே!!

0
186
No one wants.. Let him rule.. Vijay's final decision.. There is more twist than twist!!
No one wants.. Let him rule.. Vijay's final decision.. There is more twist than twist!!

TVK: தமிழ் திரையுலகில் பிரபல நட்சத்திரமாக அறியப்பட்டு வந்தவர் விஜய். இவர் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றினார். இதற்கு இளைஞர்களின் ஆதரவு பெருகிய வண்ணம் இருந்தது. இதனை பலரும் ரசிகர் கூட்டம் என்று கூறி வந்தனர். இதனையெல்லாம் பொருட்படுத்தாத விஜய் அவருடைய பணியில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு அதிமுக-பாஜக அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்தது. ஆனால் இதன் பின்னணியில் ஏதோ சதி வேலை இருப்பதாக உணர்ந்த விஜய் இதற்கு ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். இவர்களை தொடர்ந்து, காங்கிரஸ் கரூர் சம்பவத்தில் விஜய்க்கு மறைமுகமாக உதவுவதாக கூறப்பட்டது. அதனால் விஜய் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பார் என்று பார்க்கப்பட்டது.

ஆனால் ராகுல் காந்தி தமிழகத்தில் திராவிட  கட்சியாக திகழும் திமுகவை விட்டு புதிய கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கு யோசிக்கிறார். பாமக, தேமுதிக போன்ற மூன்றாம் நிலை கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தினால் அவர்களுடன் கூட்டு சேராமல் உள்ளார் விஜய். இந்த நிலையில் விஜய் எடுத்திருக்கும் முடிவு மிகவும் தனித்து காணப்படுகிறது.

யாரையும் நம்பாத விஜய் தனது முதல் தேர்தலிலேயே தனித்து களம் காண  இருக்கிறார் என்ற செய்தியும் பரவி வருகிறது. ஆனால் அரசியல் வல்லுநர்கள் கொள்கை எதிரி என்று கூறியவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பதும், முதல் வேட்பாளராக நான் தான் நிற்பேன் என்று கூறுவதும் விஜய்யின் அரசியலை பின்னுக்கு தள்ளும் என்று கூறுகின்றனர். இந்நிலையில் விஜய் என்ன முடிவு எடுப்பார் என்பது அரசியல் காலத்தில் பேசு பொருளாகியுள்ளது. 

Previous articleதமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல.. தேர்தல் ஆணையம் தகவல்!!
Next articleகூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் செங்கோட்டையன் தொகுதி.. யாருக்கா இருக்கும்.. அதிருப்தியில் செங்கோட்டையன்!!