விஜய் கூட்டணியில் சேர்ந்தாலும் பெரிய மாற்றம் ஏற்படாது என்பதே எங்கள் மதிப்பீடு.. பளிச்சென்று கூறிய அன்புமணி!!

0
101
Even if Vijay joins the alliance, there will be no big change Our assessment.. Anbumani who spoke brilliantly!!
Even if Vijay joins the alliance, there will be no big change Our assessment.. Anbumani who spoke brilliantly!!

TVK PMK:  நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், அக்கட்சிக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. அதனை அடியோடு சறுக்கும் வகையில் நடந்துள்ள நிகழ்வு தான் கரூர் சம்பவம். 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் விஜய் தான் என்று அவரின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் அவருக்கு இபிஎஸ் தொடர்ந்து ஆதரவு அளிப்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ கைக்கு மாற்ற வேண்டுமென, விஜய் தரப்பில் மனு  அளிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் இதற்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக பேசிய பாமக தலைவர் அன்புமணி, உச்ச நீதிமன்றத்தின்  தீர்ப்புக்கு வரவேற்பு அளித்ததுடன், சிபிஐ விசாரணையை முதலில் கோரியது பாமக தான் என்றும் கூறினார். மேலும், கரூர் சம்பவத்தில் பல்வேறு சதி வேலைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்நிலையில் சிபிஐ இதனை வெளிக்கொண்டு வரும் என்று நம்புகிறேன் என்று விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்தார். இதனால் இவர் விஜய்யுடன் இணக்கமாக தான் இருக்கிறார் என்றும், விஜய்யுடன் கூட்டணியில் இணைவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக ஒரு நிகழ்வு அரங்கேறியதாக கூறப்படுகிறது. நேற்று பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜன் பாண்டா அன்புமணியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

அப்போது பாஜக-பாமக கூட்டணி பேச்சு வார்த்தைகள் பற்றியும், தொகுதி பங்கீடு பற்றியும் பேசப்பட்டுள்ளதாக பாமக  வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் விஜய்யை கூட்டணியில் சேர்ப்பதற்கான பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டிருக்கிறது. அப்போது அன்புமணி விஜய்யை கூட்டணியில் சேர்ப்பதால் எந்த மாற்றமும் நடக்க போவதில்லை என்று கூறியதாக சொல்கின்றனர். இதனால் விஜய் கூட்டணியில் இணைவதில் அவருக்கு விருப்பம் இல்லையென்றும் சொல்லப்படுகிறது.

Previous articleதவெகவின் எதிர்காலம் திமுக கையில்.. முடிவை தீர்மானிக்கும் கூட்டணி.. அச்சத்தில் விஜய்!!
Next articleஇருமல் மருந்து மரணம்.. முறைகேடு தெரிந்தும் சோதனை இல்லை.. அல்வா அறிவிப்புகள் மட்டும் தான்.. இபிஎஸ் சாடல்!!