
PMK DMK: தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கபட்டு வரும் நிலையில், பாமக தன்னுடைய தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. கடந்த 8 மாதங்களாகவே தந்தைக்கும், மகனுக்கும் இடையில் தலைமை போட்டி நிலவி வருகிறது. இதனால் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார்.
ஆனால் தேர்தல் ஆணையமோ கட்சியின் தலைவர் மற்றும் தலைவர் பதவிக்கு உறுதியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனால் ஆத்திரமுற்ற ராமதாஸ் இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாக சவால் விட்டார். இதனை தொடர்ந்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, ராமதாசை காண பல்வேறு தலைவர்களும் வந்து சென்றனர். அப்போது, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் சென்றார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் மருத்துவர் ஐயாவை சந்திப்பதற்கு முன் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது என்று கூறினார். இது திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கான தொடக்க புள்ளியாக பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இபிஎஸ் ராமதாஸை சந்தித்து சுமார் அரை மணி நேரம் உரையாடினார். இது குறித்து இபிஎஸ்யிடம் கேட்ட போது அதை பற்றியெல்லாம் வெளிப்படையாகக் கூற முடியாது என்று கூறி முடித்தார். அதிமுக அன்புமணியிடம் கூட்டணிக்கு சம்மதம் வாங்கியதாக சொல்லப்பட்ட நிலையில் ராமதாஸின் நிலைப்பாடு என்ன வென்று தெரியாமல் இருந்தது.
இதன் காரணமாக பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் ராமதாஸ், திமுக கூட்டணியுடன் இணைய சில நிபந்தனைகளுடன் ஒப்பு கொண்டார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ராமதாஸின் இந்த முடிவு அன்புமணிக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இவர்கள் இருவரின் கூட்டணி முடிவை பொறுத்து தான் பாமக யாருக்கு சொந்தம் என்பது முடிவாகும் என்றும் சொல்லப்படுகிறது.
