
ADMK TVK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வருபவர் தான் தளபதி விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். இந்த கட்சிக்கு இளையர்களின் ஆதரவும், மாற்று ஆட்சியை விரும்புவோரின் ஆதரவும் பெருகி வருகிறது. தவெக சார்பாக கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில், 41 பேர் உயிரிழந்தும் கூட அவருக்கான ஆதரவு குறையவில்லை.
ஆனால் இந்த நிகழ்வின் காரணமாக விஜய் மிகவும் முடங்கி விட்டதாக கூறப்பட்டது. இதனை பயன்படுத்தி கொண்ட அதிமுக விஜய்க்கு ஆதரவாக பேசியது மட்டுமல்லாது, சட்ட சபையிலும் விஜய்யின் குரலாக ஒழித்தது. அதிமுகவிடமிருந்து கூட்டணிக்கான அழைப்பு விடுத்தும் அதனை ஏற்காத விஜய் முதல்வர் வேட்பாளர், அதிக தொகுதிகள் என பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார். ஆனால் இந்த நிபந்தனையை ஏற்று கொள்ளாத இபிஎஸ் தொடர்ந்து விஜய்யுடன் பேசி, அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கரூர் சம்பவத்தால் பின் தங்கியுள்ள விஜய், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நம் நிலைமை மிகவும் மோசமாக விடும் என்பதை எண்ணி அதிமுகவுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார். ஆனால் அவரின் தனி தன்மையையும் தக்க வைத்து கொள்ள போராடுகிறார். திமுகவும் ஆட்சிக்கு வர கூடாது, அதே சமயம், இரண்டாம் கட்ட தலைவர் பதவியிலும் அமர கூடாது என்பதில் விஜய் உறுதியாக உள்ளார்.
முதல்வர் வேட்பாளராக நான் தான் இருப்பேன் என்று இபிஎஸ் கூறியதால், தற்போது அதிமுகவின் பாரம்பரிய வாக்காளர்களை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளாராம். பாரம்பரிய வாக்காளர்களும் விஜய் பக்கம் திரும்பினால் விஜய்க்கு முதல்வர் சீட் தரப்படும் என்று தவெகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் அறிவுரை கூறியதால் விஜய் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக தலைமை கொஞ்சம் ரிலாக்ஸாக உள்ளது என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
