அதிமுக-பாஜக கூட்டணிக்குள் இணையும் பிரம்மாண்ட கட்சி.. குஷியில் இபிஎஸ்!!

0
548
Big party to join AIADMK-BJP alliance.. EPS in Kushi!!
Big party to join AIADMK-BJP alliance.. EPS in Kushi!!

BJP IJK: 2026 சட்டமன்ற  தேர்தலுக்காக கூட்டணி வியூகங்கள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், மக்களை சந்திக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை  மீட்போம் என்ற தேர்தல் பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது.  திமுக  கூட்டணி கட்சிகள்  பலமாக உள்ள நிலையில், அதிமுகவும்  தன்னுடைய கூட்டணியை பெருக்க முயற்சித்து வருகிறது.

தவெகவை தம் பக்கம் இழுக்க பார்க்கும் அதிமுக, அதே வேளையில் பாமக, தேமுதிக, போன்ற கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து சிறிய கட்சியாக அறியப்படும், புதிய தமிழகம் மற்றும் தமமுக கட்சி அதிமுக-பாஜக கூட்டணியில் இணையும் சாத்திய கூறுகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், SRM கல்வி குழுமத்தின் நிறுவனர் முனைவர் டி.ஆர். பாரிவேந்தர் 2010 இந்திய ஜனநாயக கட்சி ஒன்றை தமிழ்நாட்டில் துவங்கினார்.

சமூக நலன், மாணவர் நலன் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் போன்ற கொள்கைகளை நோக்கமாக கொண்டுள்ள இந்த கட்சி, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி  பெற்றது. பின்னர் 2016 சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு எந்த இடத்தையும் வெல்லவில்லை.

இதன் பிறகு 2021 சட்டமன்ற  தேர்தலில் தனித்து போட்டியிட்ட IJK தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர போவதாக அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். சென்னையில் காதசி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் இதை கூறிய அவர், IJK இந்த தேர்தலில் குறைந்தது 5 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்தார். 

Previous articleஇந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் நுழைய முடியாது.. முயன்றால் கை துண்டாக வெட்டப்படும்.. வைகோவின் அதிரடி பேச்சு!!
Next articleஆண்கள் மாறும் வரை இங்கு எதுவும் மாறாது.. ஆவேசமாக பேசிய கனிமொழி எம்.பி.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!