DMK: தமிழ்நாட்டின் தற்போதைய வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆவார். இவர் வருவாய் மாவட்ட வருவாய் பணியமைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளை கவனித்து வருகிறார். திமுக கட்சியை சேர்ந்த இவர் 2006 முதல் 2011 காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சராகவும், சாத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
இவர் இதற்கு முன் ஐந்து முறை அமைச்சராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை வேகமெடுத்துள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளும், போர்கால அடிப்படையில் உதவிகளும் தமிழக அரசால் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், திமுக தலைமை தன்னுடைய பிரச்சார பயணத்தை ஒதுக்கி வைத்து விட்டு முக்கிய அமைச்சர்களுடன் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் பேரிடர் துறை அமைச்சராக உள்ள ராமச்சந்திரன் இந்த விஷயத்தில் ஈடுபாடு காட்டுவதாக தெரியவில்லை என பேசப்படுகிறது.
இதற்கான காரணம் என்னவென்று ஆராயும் போது, நடைபெற இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு திமுக தலைமை சீட் கொடுக்க விரும்பவில்லை என்று தகவல் தெரிவிக்கிறது. இந்த தகவலை அறிந்த அவர் சீட் கிடைக்காத பொழுது எதற்காக உழைக்க வேண்டும் என்று நினைத்து, மக்கள் பணிகளில் ஈடுபாடு காட்டாமல் உள்ளார் என்று நம்ப த்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் பேரிடர் என்பதால் திமுக அரசு இந்த மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் பேரிடர் துறை அமைச்சரின் செயலால் ஸ்டாலின் அதிருப்தி அடைந்துள்ளார் என்று சிலர் கூறுகின்றனர்.

