
BJP: தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. இவர் பாஜகவிற்கு வந்த பிறகு தான் அந்த கட்சிக்கு தமிழகத்தில் நல்ல மரியாதையை கிடைத்தது எனலாம். அவரின் ஆணி தனமான பேச்சு, சாமர்த்தியமான சிந்தனை போன்றவை தமிழக மக்களின் மனதில் அவருக்கு ஒரு தனி இடத்தை பிடித்து தந்தது. அந்த வகையில் அண்மையில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள், அவர் பெயரில் நற்பணி மன்றம் ஆரம்பித்து அதற்கான கொடியினை அறிமுகம் செய்திருந்தனர்.
இந்த செய்தியறிந்த அண்ணாமலை, என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கு மிக்க நன்றி, ஆனால் என் பெயரில் நற்பணி மன்றம் துவங்குவது, கொடியை வெளியிடுவது போன்ற செயல்பாடுகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருந்தார். ஆனாலும் அவரது ஆதரவாளர்கள் அதனை கைவிடுவதாக தெரியவில்லை. தற்போது புதிதாக நெல்லையில் அண்ணாமலையின் பெயரில் நற்பணி மன்றத்தை திறக்கவும், அதன் கிளைகளை விரிவுபடுத்தவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
இதன் திறப்பு விழாவிற்கு அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும் வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. இது குறித்து அண்ணாமலை நற்பணி மன்றத்தை தொடங்கிய வேல்கண்ணன் பேசிய போது, இதில் அரசியல் ஏதுமில்லை. அவர் மீது எங்களுக்கு உள்ள அன்பினால் மட்டுமே நற்பணி மன்றம் தொடங்கினோம். இதை யாரும் அரசியலாக பார்க்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். இந்த மாறியான நிகழ்வு விஜய்க்கு அடுத்து அண்ணாமலைக்கு ஆதரவு பெருகி வருவதை நிரூபிக்கிறது என்று மதிப்பிடப்படுகிறது.
