ADMK TVK: மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்ட அதிமுக தற்போது அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. கட்சியின் முன்னாள் தலைவர்கள் வழி நடத்தியது போல இபிஎஸ் கட்சியை வழி நடத்தவில்லை என அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமல்லாமல் இபிஎஸ் தலைவர் பொறுப்பை ஏற்றதிலிறுந்தே அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அதனால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் கட்சி மாறுவதையும், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலும் இருந்தனர்.
தற்போது 2026 தேர்தலுக்காக அதிமுகவும் தேசிய கட்சியான பாஜகவும் கூட்டணியில் உள்ள நிலையில், வேறு எந்த கட்சியும் உறுதி கூட்டணிக்கு செய்யப்படவில்லை. இதனால் தமிழகத்தில் பலம் வாய்ந்த வேறு கட்சியை தேடிவந்த இபிஎஸ்க்கு ஜாக்பாட் அடித்தது போல உதயமானது கட்சி தான் தமிழக வெற்றிக் கழகம். இபிஎஸ்யின் நல்ல நேரம், விஜய் திமுகவை தனது அரசியல் எதிரி என்று கூறிவிட்டார். ஆனால் பாஜகவை கொள்கை எதிரி என்று அறிவித்தார்.
இதனால் சற்று பதற்றமடைந்த இபிஎஸ் விஜய்யை சமாதானபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். அப்போதும், விஜய் பாஜக கூட்டணியை விட்டு விலகினால் தான் உங்களுடன் கூட்டணி வைக்க முடியும் என்று உறுதியாக கூறி விட்டதாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பாஜகவிற்கு தூதாக செயல்பட்டு, விஜய்யுடன் போனில் பேசியதாக சொல்லப்பட்டது.
இவரை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இணைந்த தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனும் திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று விஜய்க்கு மறைமுகமாக அழிப்பு விடுத்துள்ளார். இவரின் இந்த அழைப்பு அதிமுகவின் தூதாக இவர் செயல்ப்படுவதை நிரூபிப்பதோடு, இபிஎஸ்யின் வீக்னஸ்யும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

