TVK DMK: கட்சி தொடங்கி பல மாதங்களாக சமூக ஊடகங்கள் மூலமாக மட்டுமே தன்னுடைய கருத்துக்களை கூறி வந்த விஜய் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டார். ஒர்க் ப்ரம் ஹோம் தலைவர் என்று அனைவரும் கூறி வந்த நிலையில் தன்னுடைய பிரச்சாரத்தையும் தொடங்கினார். இந்த பிரச்சாரம் சனி மற்றும் யிற்று கிழமைகளில் மட்டும் தான் நடக்கும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் கரூரில் நடந்த விபத்து உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது.
ஒரு அரசியல் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும். இதன் காரணமாக மீண்டும் வீட்டில் அடைபட்டிருந்த விஜய் காணொளி மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். சம்பவம் நடந்து 1 மாதத்திற்கு மேலாகிய நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் டெல்டாவில் அரங்கேறிய நெல் பயிர்களின் சேதம் குறித்து தவெக சார்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் சேதமான போதே மீதமிருக்கும் நெல்மணிகளை பாதுகாக்க தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இது நடப்பாண்டு மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் இது தான் நிலைமை. நானும் டெல்டா காரன் தான் என்று பெருமை பேசும் ஸ்டாலினிடம் சில கேள்விகளை முன் வைக்கிறேன் என்று குறிப்பிட்ட விஜய் 5 கேள்விகளையும் முன் வைத்தார்.
41 உயிர்கள் பலியானதற்கு 1 மாதம் கழித்து ஆறுதல் கூறும் விஜய் நெல் மணிகள் மீது கவலைப்படுவது சிரிப்பை வர வைக்கிறது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் விஜய்யின் இந்த பதிவு அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி ஒர்க் பிரேம் ஹோம் தலைவராகவே மாறி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

