PMK DMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே சச்சரவு நிலவி வருகிறது. ராமதாஸ் தனது மூத்த மகளின் மகனான முகுந்தனை இளைஞரணியின் தலைவராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி இன்று வரை அதனை ஏற்காமல் பிடிவாதமாக இருந்து வருகிறார். அப்போது ஆரம்பித்த சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது புதிய திருப்பமாக பாமகவின் செயல் தலைவர் பதவியை தனது மூத்த மகள் காந்திமதிக்கு வழங்கியுள்ளார் ராமதாஸ்.
இதனால் அன்புமணி மேலும் கோபமடைந்துள்ளதாக அன்புமணி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதெல்லாம் ஒரு புறம் இருக்க 2026 சட்டமன்ற தேர்தலுக்குக்காக, அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைய போவதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்து வரும் நிலையில், ராமதாஸின் நிலைப்பாடு என்னவென்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் திமுக உடன் கூட்டணி அமைப்பிர்களா என்று நிருபர்கள் கேட்ட போது, அது குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென்று சூசகமாக பதில் கூறினார் ராமதாஸ்.
ராமதாஸ்-திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதனை கலைக்கும் விதமாக அன்புமணி பல்வேறு விஷயங்ககளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் 30 மணல் குவாரிகளை திறப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ளதை கடுமையாக எதிர்த்துள்ளார். மேலும் திமுக ஆட்சியில் ஏற்கனவே நடந்த கிட்னி திருட்டு, மணல் திருட்டு போன்றவற்றையும் பட்டியலிட்டு காட்டினார். இவரின் இந்த செயல் ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைவதை தடுப்பதற்கான முயற்சியாகவே இருக்கிறது என்று ராமதாஸின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

