திமுகவுடன் நெருக்கம் காட்டும் தவெக.. ஆடிப்போன விஜய்.. கூட்டத்தில் வெளிவந்த உண்மை!!

0
475
TVK showing closeness with DMK.. Vijay who was shocked.. The truth came out in the meeting!!
TVK showing closeness with DMK.. Vijay who was shocked.. The truth came out in the meeting!!

TVK: தவெக கரூர் சம்பவம் காரணமாக மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. கட்சியின் தலைவர் முதல் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை அனைவரும் வெளியில் தலை காட்டாமல் இருந்தனர். சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின் வீடியோ வெளியிட விஜய் பாதிக்கபட்டவர்களிடம்  மன்னிப்பு கூறியதோடு கலவரத்தை  தூண்டும் வகையில் பேசியிருந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து சந்தித்த விஜய், இதற்கு பிறகு கட்சி தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அதில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 28 பேர் கொண்ட நிர்வாக  குழுவை விஜய் நியமித்துள்ளார். நிர்வாக குழுவில் யார் யாரை நிர்வகிக்கலாம் என்பது போன்ற ஆலோசனைகள் கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் தலைமையில் நடைபெற்ற போது, கரூரில் ஏற்பட்ட விபத்துகள் எதனால் ஏற்பட்டது எனவும் ஆராயப்பட்டிருக்கிறது.

அப்போது விஜய் வருவதற்கு தாமதமாகும் என்று இரண்டாம் கட்ட தலைவர்கள் மக்களிடம் அறிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் கூட்டத்தை சரியாக வழி நடத்தவில்லை என்றும், கூட்ட நெரிசலில் மக்களுக்கு தேவையான எந்த முதலுதவியும் தவெக சார்பில் செய்யப்படவில்லை என்பதையும் விஜய் அறிந்து கொண்டார். இது மட்டுமல்லாமல் விபத்து  எதனால் ஏற்பட்டது என்பதை கூறாமல், ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி வந்துள்ளனர்.

மேலும் கரூர் சம்பவத்தில் தவெகவை சேர்ந்த பல பேர் திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டு வந்தததும் தெரியவந்தது. இதன் காரணமாக தவெகவிற்கு உண்மையாக உள்ள தொண்டர்களையும், இரண்டாம் கட்ட தலைவர்களையும் மட்டும் கட்சியில் வைத்திருக்க முடிவு செய்துள்ளாராம். இதற்கான வேலைப்பாடுகள் விஜய் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

Previous articleஅதிமுகவை பின்னுக்கு தள்ளும் விஜய்.. இனிமே நம்ப கொடி தான் பறக்கும்.. திக்திக் மோடில் இபிஎஸ்!!
Next articleநீங்க தலை மறைவானதனால தான் இவ்வளவு பிரச்சனை.. ஆதங்கப்பட்ட விஜய்.. திணறும் புஸ்ஸி ஆனந்த்!!