இழப்பு கரூரை சேர்ந்தவர்களுக்கு எங்களுக்கென்ன.. விஜய்யை எதிர்க்க தயங்கும் காங்கிரஸ்!!

0
189
What is the loss for those who belong to Karur.. ​​Congress hesitates to oppose Vijay!!
What is the loss for those who belong to Karur.. ​​Congress hesitates to oppose Vijay!!

CONGRESS TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஆயிரக்கணக்காக தொண்டர்களை தன் வசம் ஈர்த்துள்ளார். ஆனால் கடந்த மாதம் கரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் அதனை அடியோடு சிதைக்கும் வகையில் அமைந்திருந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் விஜய்க்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

இபிஎஸ் விஜய்க்கு நேரடியாகவே ஆதரவு தெரிவித்து, திமுக அரசின் மேல் உள்ள பிழைகளை சுட்டி காட்டி வந்தார். பாஜகவும் விஜய்க்கு ஆதரவாக 8 பேர் கொண்ட தனி நபர் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. மேலும் காங்கிரஸ் கட்சி கரூர் சம்பவம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், விஜய்யிக்கு மறைமுகமாக உதவி வருகிறது என்றும் சொல்லப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னை அழைத்து வந்து சந்தித்த விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூரிடம் கேட்ட போது, பாதிக்கப்பட்டவர்கள் கரூர் மக்கள், ஆறுதல் கூறுவது விஜய், இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது என்று பதிலளித்தார்.

திமுக கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் கட்சி விஜய்யை நேரடியாக எதிர்க்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இவரின் இந்த பதில் திமுகவிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லும் காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதால் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவிக்க தயங்குகிறது என்று சொல்லப்படுகிறது. 

Previous articleவிஜய் இல்லை.. அப்போ நம்ப தான் கிங்கு.. பிரேமலதா போட்ட பிளான்!!
Next articleகூட்டணிக்கு நோ சொல்லிய விஜய்.. தேமுதிகவிடம் கையேந்தும் இபிஎஸ்.. விரக்தியில் அதிமுக தொண்டர்கள்!!