ADMK TVK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே உள்ள நிலையில் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தான், அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவாகியுள்ளது. விஜய் அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்த சமயத்தில் தவெகவை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர், தவெகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய முகமான செங்கோட்டையன் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் அதிமுக கூட்டணிக்கு நோ சொல்லியது, செங்கோட்டையனின் நீக்கம் மற்றும் அவர் இணைந்த புதிய அணி இவற்றை எல்லாம் வைத்து பார்த்தால், இது இபிஎஸ் போட்ட பிளானாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஏனென்றால் விஜய் தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக கூறபட்டதால், இபிஎஸ் மிகவும் வேதனையில் இருந்தார்.
இதனால் விஜய்யை நேரடியாக கூட்டணியில் சேர்க்க முடியாது என்பதை அறிந்த இபிஎஸ், செங்கோட்டையன் மூலம் காய் நகர்த்துகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கிய போது டெல்லி சென்ற அவர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தை எந்த பலனையும் தரவில்லை என்று அனைவரும் நினைத்து வந்தனர்.
ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் தான் இவ்வாறான திட்டம் தீட்டப் பட்டிருக்கிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விஜய் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவதற்கான சாத்தியம் குறைவு. அதனால் இந்த நால்வர் அணி விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியில் சேர்த்து விட்டால், அதன் பிறகு அவர்களை மெல்ல மெல்ல அதிமுக-பாஜக உடன் இணைத்து விடலாம் என்று இபிஎஸ் நினைக்கிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக மூத்த பத்திரிக்கையாளரான செந்தில்வேல், இந்த நிகழ்விற்கு எடப்பாடி பழனிசாமி உடந்தையாக இருக்கிறார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

