DMDK PMK: தமிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்பாக தான் இருக்கும். அதனை மேலும் மெருகேற்றும் வகையில், இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரபோகிறது. இந்நிலையில் திராவிட கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது மட்டுமல்லாமல், தேமுதிக, பாமக, தவெக தொடங்கி சிறிய கட்சிகள் வரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. பாமக அதிமுக கூட்டணியில் சேர சம்மதம் தெரிவித்து விட்டது என்று கூறப்படும் நிலையில், தேமுதிக, திமுக-அதிமுக என இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறது.
இந்நிலையில், புதிதாக செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் நால்வர் அணியாக உருவானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் நால்வரும், துரோகத்தை எதிர்போம், அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று சபதம் எடுத்துள்ளனர். அந்த வகையில், திராவிட கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் நால்வர் அணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
அதிமுக அல்லது திமுக கூட்டணியில் இணைந்தால் இரட்டை இலக்கத்தில் தொகுதியும், ஆட்சி பங்கும் கிடைப்பது சந்தேகம். அதனால் இந்த நால்வர் அணியுடன் இணைந்தால், தேமுதிக, பாமக கட்சிக்கு மதிப்பும், மரியாதையும் பெருகும். மேலும், அதிமுகவில் அதிகளவில் ஆதரவை கொண்டுள்ள முக்கிய முகங்களையே கட்சியிலிருந்து நீக்கிய பிறகு, அக்கட்சி மக்கள் மத்தியில் ஆதரவை இழந்துள்ளதை அறிந்த, தேமுதிக, பாமகவும் நால்வர் அணியில் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

