ADMK: மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்படும் அதிமுக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிகப்படியான மக்கள் ஆதரவையும், நம்பிகையையும் கொண்டிருந்தது. ஆனால் அவர் இறந்த பிறகு அதிமுக மேல் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை சற்று குறைந்தே காணப்படுகிறது. இதற்கு காரணம் தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் பலர் கூறி வருகின்றனர். இவர் பொறுப்பு ஏற்றதிலிருந்தே அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அது மட்டுமல்லாமல், ஜெயலலிதாவின் நம்பிக்கை குறியவர்கள், நெருங்கிய நண்பர்கள் என அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினார்.
இவரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. பதவியின் மேல் இருக்கும் ஆசையால் தான் எபிஎஸ் இது போன்ற செயல்களை செய்து வருகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக கட்சியின் முக்கிய முகமான எம்ஜிஆர் காலத்திலிருந்து கட்சிக்கு பணியாற்றி வந்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். செங்கோட்டையனுக்கு கட்சியில் அதிகளவில் ஆதரவாளர்கள் இருப்பதால், இவரின் நீக்கம் அதிமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.
தற்போது அது நிரூபனமாகியுள்ளது. செங்கோட்டையன் மேற்கு மண்டலத்தில் அதிகளவு மக்களின் செல்வாக்கு பெற்றிருப்பதால், இவர் இணைந்துள்ள நால்வர் அணியிலிருந்து, இவர் மேற்கு மண்டலத்தில் முக்கிய வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் இபிஎஸ் தேர்வு செய்யும் வேட்பாளர்கள் மேற்கு மண்டலத்தில் செங்கோட்டையனை எதிர்த்து நின்றால் தோற்று விடுவோம் என்ற பயத்தினால் பின் வாங்குகிறார்களாம். இதுவே இபிஎஸ்யின் முதல் தோல்வியாக கருதப்படுகிறது.

