CONGRESS TVK DMK: தமிழக அரசியல் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக, திமுக என்ற பிரதான கட்சிகள் மாற்றி மாற்றி ஆட்சி கட்டிலில் அமர்ந்த காலம் போய், தற்போது புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சி தோன்றி எதிர் கட்சியாக அமரும் நிலையில் உள்ளது. விஜய் கட்சி துவங்கிய நாள் முதல் அதற்கான ஆரவாரமும், ஆர்பரிப்பும் அதிகளவில் உள்ளது. இதனால் விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறாறோ அந்த கட்சி ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர்கட்சியாக வரும் வாய்ப்பு உள்ளது.
எனவே அதிமுக அண்மை காலமாக அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருவதால், 2026 சட்டமன்ற தேர்தலில், எதிர்கட்சி அந்தஸ்தையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென தவெகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் அதிமுக பாஜக கூட்டணியில் இருப்பதால், விஜய் இந்த கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்காமல் உள்ளளர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், விஜய் தன்னுடைய நெருங்கிய நண்பரான, காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில், விஜய் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கையும், பாதிக்கு பாதி தொகுதியையும் தருவதாக கூறியுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு முறையான தொகுதிகள் வழங்கப்படாததால் காங்கிரஸ் தலைமையும் தவெக கூட்டணியில் இணைவதற்கான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது . இந்த கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் ஜனவரியில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

