நீங்க கூட்டத்துக்கு மட்டும் வந்தா போதும்.. தனிப் போட்டிக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் விஜய்!!

0
346
It is enough if you just come to the meeting.. Vijay will lay a strong foundation for the individual competition!!
It is enough if you just come to the meeting.. Vijay will lay a strong foundation for the individual competition!!

TVK: தமிழக அரசியலில் புதிய அலைகளை எழுப்பி வரும் நடிகர் விஜய்யின் வருகை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த அவரது பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றும் பெருமளவில் மக்கள் கூட்டங்களால்  நிறைந்தன. நகரம், கிராமம் என எங்கு சென்றாலும் மக்கள் பெருமளவில் வருகை தந்து அவரது உரைகளை கேட்கும் நிலை உருவாகியுள்ளது.  முன்னதாக, விஜய் புதிய கட்சி அமைத்து விட்டார் என்ற அறிவிப்பு வெளியான போது, அவர் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்தது.

ஆனால் தற்போது, அவரது பொதுக் கூட்டங்களில் திரளும் மக்கள் கூட்டம் விஜய்க்கு கூட்டணி தேவையில்லை என்ற கருத்தை வலுப்படுத்தியுள்ளது. மக்கள் ஆதரவு மட்டுமே அவருக்கான மிகப்பெரிய ஆயுதமாக மாறி இருக்கிறது. இதன் மூலம் அதிமுக மற்றும் திமுக ஆகிய பெரிய கட்சிகளின் வாக்கு வங்கியையும்  விஜய் தம் பக்கம் இழுப்பதாக  அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்களிப்போர் அவருக்கு வலுவான ஆதரவாக மாறியிருக்கின்றனர்.

இந்நிலையில், விஜய் முறையான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டால், தனியாகவே போட்டியிட்டு வெற்றியைப் பெறக்கூடிய வாய்ப்பு  அவருக்கு உள்ளது என்ற நம்பிக்கை அவரது ஆதரவாளர்களிடையே பரவியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் இது ஒரு புதிய மாற்றத்தின் தொடக்கம் என மதிப்பிடப்படுகிறது. விஜய்யின் இந்த அரசியல் பயணம், இவ்வாறான புதிய வீயூகமும் திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டிருகிறது. 

Previous articleநால்வர் அணியில் விருப்பமில்லை.. விலகிய ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளர்!! கலக்கத்தில் ஓபிஎஸ்!!
Next articleதிமுக எதிர்ப்பின் புதிய முகம்.. அதிமுக மட்டுமல்ல விஜய்யும் தான்!! பரபரக்கும் தேர்தல் களம்!!