பாமக பிரிவுக்கு இவர்கள் தான் காரணம்.. அன்புமணி பகீர்!!

0
216
They are the reason for the PMK division.. Anbumani Bhagir!!
They are the reason for the PMK division.. Anbumani Bhagir!!

PMK: அனைத்து கட்சிகளும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு செயல்படும் வேலையில் பாமகவில் மட்டும் உட்கட்சி பூசல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்குவது இது போன்ற செயல்பாடுகள் அரங்கேறிவிட்டன. அதுமட்டுமல்லாமல், பாமகவின் பிரிவுக்கு காரணமாக இருந்த செயல்பாடுகளை ராமதாஸ் மீண்டும் செய்ய துவங்கியுள்ளார். அந்த வகையில், குடும்ப அரசியலை முன்னிறுத்தும் விதமாக, தனது மூத்த மகள் காந்திமதிக்கு செயல் தலைவர் பதவி வழங்கியது பேசு பொருளானது.

இந்நிலையில் பென்னாகரம் பகுதியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி, ராமதாசிடமிருந்து என்னை பிரித்து வைத்துள்ளனர். ராமதாசை சுற்றி இருக்கும் துரோகிகள் விலகும் வரை நான் சேர மாட்டேன் என்று கூறியிருந்தார். இவரின் இந்த கருத்து பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி மற்றும் எம்.எல்.ஏ அருள் இவர்கள் இருவரை தான் அன்புமணி துரோகிகள் என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று அன்புமணியின்  ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால் பாமகவின் பிரிவுக்கு காராணமாக இருந்த இளைஞர் அணி தலைவர் பதவி முதலில் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு தான் வழங்கப்பட்டிருந்தது. இதில் அன்புமணிக்கு உடன் பாடில்லை என்பதை அறிந்த தமிழ்குமரன் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதன் பிறகு இந்த பதவி ராமதாசின் மூத்த மகளின் மகனான முகுந்தனுக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக பாமகவின் பிளவு மேடையிலேயே எதிரொலித்தது. இதனை தொடர்ந்து இந்த பதவி மீண்டும் தமிழ் குமரனுக்கே வழங்கப்பட்டது.

இவ்வாறு மீண்டும் மீண்டும் இந்த பதவி தமிழ் குமரன் கைக்கே சென்றடைவதை பார்த்தால் இது ஜி.கே. மணியின் சதியாக இருக்குமோ என்ற எண்ணம் எழுந்தது. இவர் இவ்வாறு செய்வது அன்புமணியை மீண்டும் கட்சிக்குள் வர விடாமல் தடுப்பதர்கான செயலாகவே பார்க்கப்பட்டது. மேலும் அண்மையில் பாமக எம்.எல்.ஏ அருள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். இதற்கு காரணம் அன்புமணி தான் என்று அவர் கூறியிருந்தார். இதனை வைத்து பார்த்தால் அன்புமணி கூறிய துரோகிகள் இவர்களாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Previous articleஇபிஎஸ்யை நம்பி கட்சி செயல்படவில்லை.. அதிமுக அமைச்சர் பர பர பேட்டி!!
Next articleவிஜய் சொல்றத கேட்டு தான் ஆகணும்.. அப்செட்டில் இபிஎஸ்!! குஷியில் விஜய்!!