AIADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருக்கும் நிலையில், எப்போதும் போல அதிமுகவும், திமுகவும் தேர்தல் களத்தில் இறங்கி வெற்றி பெறும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் ஸ்டாலினிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க, அதிமுகவில் பல பிரிவுகள் உருவாகி, கட்சியின் மூத்த தலைவர்களாக அறியப்பட்ட வருபவர்கள் ஒவ்வொருவராக இபிஎஸ்யால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
இது மேலும் சூடுபிடித்து, எம்ஜிஆர் காலம் முதல் தற்போது வரை அதிமுகவின் முகமாக அறியப்பட்ட மூத்த அமைச்சர் செங்கோட்டையனின் பதவிகளை பறித்தது மட்டுமல்லாமல் அவரை கட்சியிலிருந்து அடியோடு நீக்கினார். செங்கோட்டையன் ஈரோட்டில் தனக்கென தனி செல்வாக்கை பெற்றிக்கும் நபர். இவரின் பதவிகள் பறிக்கப்பட்ட போதே அப்பகுதி மக்கள் கொந்தளித்தனர். இந்நிலையில், அவர் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டது அவர்களுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது, சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமோ, அந்த அளவிற்கு திமுகவிற்கு சாதகமாக அமைந்து விட்டது. ஏனென்றால் திமுக சார்பாக ஈரோடு மாவட்டத்தில் முத்துசாமி களமிறங்கி உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. இவர் முதலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு ஈரோடு தொகுதியில் பல முறை வெற்றி பெற்றுள்ளார்.
பின்னர் 2010 யில் திமுகவில் இணைந்த இவர், 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றார். ஈரோட்டில் செங்கோட்டையனுக்கு அடுத்ததாக மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரே நபர் இவர் தான் என்பதால் செங்கோட்டையனின் நீக்கத்தை பயன்படுத்தி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்று திமுக திட்டம் தீட்டி வருகிறது. இதற்கான ஆயத்த பணிகளை முத்துசாமி முழு வீச்சீல் மேற்கொண்டு வருகிறார்.

