ADMK DMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் எப்போதும் விறுவிறுப்பாக தான் இருக்கும். அதுவும் இந்த முறை பல்வேறு திருப்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, தவெக, நாதக போன்ற கட்சிகளனைத்தும் தேர்தல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னணி கட்சிகளை சேர்ந்த பலரும் வேறு கட்சியில் இணைந்து வருவது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியையும் திராவிட கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த முயற்சியில் முன்னிலை பெறுவது திமுக என்றே சொல்லலாம். திமுகவில் கூட்டணி கட்சிகளின் கோரிக்கையால் முழித்துக் கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு அதனை ஈடு செய்யும் வகையில் பல்வேறு முக்கிய தலைகள் திமுகவில் இணைந்து வருவது சாதகமாகி உள்ளது. ஏனென்றால் அதிமுக உரிமை மீட்புக் குழுவில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், வைத்தியலிங்கமும் இணைய உள்ளதாக ஊடகங்கள் கூறி வருகின்றன.
இந்நிலையில் புதிதாக அதிமுகவிலிருந்து மேலும் ஒருவர் இணைய இருப்பது இபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிமுக கூட்டணி கட்சியான கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு நேற்று முதல்வரை நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், வாய்ப்பு கிடைத்தால் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட தயங்க மாட்டேன் என்றும், அதிமுக பாஜகவின் கிளையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். இவரின் இந்த கருத்து இவர் திமுகவில் இணைந்து விட்டதற்கு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

