பாஜகவின் குரலாக ஒலிக்கும் அன்புமணி.. நயினார் தமிழிசையின் கருத்தை முன்வைத்து பேச்சு!!

0
149
Anbumani, the voice of BJP.. Nayanar's speech presenting the opinion of Tamilisai!!
Anbumani, the voice of BJP.. Nayanar's speech presenting the opinion of Tamilisai!!

PMK BJP VCK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருக்கும் நிலையில், திராவிட கட்சிகள் அனைத்திலும் கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் வரையறுக்கப்பட்டு வருகிறது. அதிலும் திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளனைத்தும் ஆட்சியில் பங்கு, பாதியளவு தொகுதிகள் என திமுக தலைமையை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுக பக்கம் இருக்கும் அன்புமணி பாமகவின் பிரச்சாரத்தில், திமுக கூட்டணியில் விசிக ஏன் தொடர்கிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

சமூக நீதி குறித்து திமுக மேடையில் மட்டும் தான் பேசி வருகிறது. இந்த நான்கரை ஆண்டு காலத்தில் திமுக பட்டியலின மக்களுக்கு என்ன செய்து விட்டது. அவர்களுக்கு பட்டியலின மக்களின் ஓட்டு மட்டும் வேண்டும். மற்ற படி இவர்களின் வளர்ச்சியை பற்றி திமுகவிற்கு கவலை இல்லை. இப்படி இருக்கும் போது, திருமாவளவன் ஏன் அந்த கூட்டணியில் தொடர்கிறார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு முன் தமிழக பாஜக தலைவர் நயினார், சமூக நீதியை பின்பற்றாத கட்சியில் திருமா ஏன் தொடர்கிறார் என்று கேட்டிருந்தார்.

இவரை தொடர்ந்து முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும், திமுக உண்மையிலேயே சமூக நீதியை பின்பற்றும் கட்சியாக இருந்தால் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்க்காவது துணை முதல்வர் பதவியை திருமாவளவனுக்கு வழங்க வேண்டுமென்று கூறி பரபரப்பை கிளப்பி விட்டார். இவர்களின் விசிக பற்றிய இந்த தொடர் பேச்சு விசிகவை எப்படியாவது அதிமுக-பாஜக கூட்டணிக்கு கொண்டு வந்து விடமென்று துடிப்புடன் இருப்பதை காட்டுகிறது. மேலும் அன்புமணி பாஜகவின் குரலாக ஒலித்து வருவதை அனைவரும் விமர்சித்து வருகின்றார். 

Previous articleவாய்ப்பு கிடைத்தால் எந்த கட்சிக்கும் செல்வேன்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் பர பர பேட்டி!!
Next articleநெல்லையில் ஸ்டாலின் போட்ட கண்டிஷன்.. இதுக்கு மேல நான் பேச மாட்டேன் பேனா தான்!!