DMK: சட்டமன்ற தேர்தலுக்காக ஆளுங்கட்சியான திமுக இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில் முயற்சி செய்து வருகிறது. இதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும், 2021 முதல் தற்போது வரை திமுக அரசு செயல்படுத்திய திட்டத்தை மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக பல்வேறு நிகழ்சிகளையும் திமுக செய்து வருகிறது. மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியுற்ற தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தும் விதமாக மாவட்ட வாரியாக திமுக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருகின்றனர்.
இவர்கள் அந்தந்த பகுதியில் திமுக அரசை வலுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நெல்லை பகுதியில் அதிக கவனம் செலுத்தும் ஸ்டாலின் அங்குள்ள தலைவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் இந்த பகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனை முறியடிக்கும் விதமாக திமுக இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளது. 2016 சட்டமன்ற தேர்தலில் நெல்லையில் திமுகவை சேர்ந்த லட்சுமணன் வெற்றி பெற்றார். ஆனால் அடுத்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததற்கான காரணத்தை ஆராயும் முயற்சியில் அப்பகுதி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த தேர்தலில் நெல்லையில் திமுக வெற்றி பெறவில்லை என்றால் அப்பகுதியில் இருக்கும் திமுக தலைவர்களின் பதவி பறிக்கப்படும் என்று ஸ்டாலின் மிக தெளிவாக கூறியுள்ளார். இதன் காரணமாக நெல்லையில் திமுக அரசின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைமையின் முன் தனித்து நிற்க வேண்டுமென அமைச்சர்கள் போராடி வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் நெல்லை திமுகவிற்கு கை கொடுக்குமா, இல்லை கை நழுவுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

