விஜய் முடங்கி கிடந்ததை மறைமுகமாக விமர்சித்த திமுக தலைவர்.. அடித்தளமே இல்லாத கட்சி!!

0
132
The DMK leader indirectly criticized Vijay's paralysis.. A party without a foundation!!
The DMK leader indirectly criticized Vijay's paralysis.. A party without a foundation!!

DMK TVK: சமீப காலமாக தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும், முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை. இவர் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே, தவெகவிற்கான ஆதரவு யாரும் எதிர்ப்பார்த்திராத அளவு அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், தவெகவில் பல்வேறு இளைஞர்கள் தங்களை இணைத்து கொண்டனர். இதனை கண்ட திராவிட கட்சிகள் தவெகவை கண்டு அஞ்சு அஞ்சுகின்றன என்று பலரும் கூறி வந்தனர்.

இதனை அடியோடு சருக்கும் வகையில் அமைந்தது தான் கரூர் சம்பவம். இந்த நிகழ்விற்கு பின் விஜய் சுமார் 38 நாட்கள் முடங்கி இருந்தார். விஜய்யின் இந்த செயலை பலரும் விமர்சித்து வந்த நிலையில், தற்போது தவெகவின் எதிர்க்கட்சி துணை முதல்வரான உதயநிதியும் இதனை மறைமுகமாக விமர்சித்துள்ளார். தவெக தலைவர் விஜய் திமுக அரசை நேரடியாக விமர்சித்து வரும் நிலையில், திமுக கட்சியை சேர்ந்தவர்களோ விஜய் பெயரை சொல்வதற்கு கூட யோசிக்கிறார்கள்.

அந்த வகையில் அமைந்த நிகழ்வு தான் உதயநிதியின் பேச்சு. உதயநிதி பேசுகையில், வழக்கம் போல அதிமுகவையும், பாஜகவையும் விமர்சித்து விட்டு, விஜய் கரூர் சம்பவத்திற்கு பின் முடங்கி கிடந்ததை விமர்சித்துள்ளார். கரூர் சம்பவத்தை மையமாக வைத்து பேசிய உதயநிதி, சும்மா தட்டினால் போதும் சிறு காற்று அடித்தால் கூட கீழே விழுந்து விடும். அப்படி பட்ட அடித்தளமே சரியாக இல்லாத கட்சி தான் இது என்று கூறினார். இவரின் இந்த பேச்சு, விஜய்யை மேலும் பலவீனமாக்கும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. 

Previous articleமீண்டும் நீரில் மூழ்கிய சென்னை — திமுக அரசின் “மழைக்கு தயாரான நகரம்” வாக்குறுதி என்னாச்சு 
Next articleவிஜய்க்கு எதிராக களமிறங்க போகும் அமமுக.. சுழற்றி அடிக்கும் கட்சிகள்!!