ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், கட்சிகளனைத்தும், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்று பயணத்தையும், அதிமுக, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும் தொடங்கி மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவில் பல்வேறு பூகம்பங்கள் வெடித்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் இதனை சமாளிப்பதே இபிஎஸ்க்கு பெரும் பாடாக இருக்கிறது. இபிஎஸ் அதிமுக தலைவராக பதவி ஏற்றதிலிருந்தே கட்சி தொடர் தோல்விகளையும், முக்கிய தலைவர்களின் விலகளையும் சந்தித்து வருகிறது.
இதனை மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்த நிகழ்வு செங்கோட்டையனின் நீக்கம். கட்சியின் தலைமைக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை கட்சியிலிருந்து உடனடியாக நீக்குவது இபிஎஸ் வழக்கம். அப்படி அமைந்தது தான் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி, தினகரன், செங்கோட்டையனியன் நீக்கம். இவர்களை கட்சியிலிருந்தால் தலைமை பதவிக்கு ஆபத்து வந்துவிடுமென்ற பயத்தினால் தான் இபிஎஸ் இவர்களை கட்சியிலிருந்து நீக்கினார் என்ற கருத்தும் வலுபெறுகிறது. இதற்கு மேல் என்ன நடந்தாலும் மீண்டும் இவர்களை கட்சியில் சேர்க்க கூடாது என்பதில் இபிஎஸ் தெளிவாக உள்ளார்.
இப்படி இருக்கையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பிரிந்தவர்கள் மன்னிப்பு கேட்டால் மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து பொதுச் செயலாளரிடம் பரிந்துரைக்கப்படும் என்று கூறி இருக்கிறார். இவரின் இந்த கருத்து இபிஎஸ் மட்டும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இவ்வாறு பேசுவதால் இவரும் இபிஎஸ் எதிர்த்து போர்கொடி தூக்குகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் காராணமாக ஓ.எஸ் மணியன் கூடிய விரைவில் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என்று அதிமுகவின் நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

