திமுக அமைச்சர்களின் பதவிக்கு ஆப்பு வைத்த அதிமுக.. பிளவுறும் ஆளுங்கட்சி!!

0
261
AIADMK has wedged the posts of DMK ministers.. The ruling party is dividing!!
AIADMK has wedged the posts of DMK ministers.. The ruling party is dividing!!

ADMK DMK: தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் தேர்தல் வேட்டையில் மும்முரமாக உள்ளன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்N பயணத்ததையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளது. தேமுதிக, பாமக போன்ற கட்சிகளும் கூட்டணி கணக்குகளில் தீவிரமாக உள்ளன.

இது மட்டுமல்லாமல், தேர்தல் நெருங்கும் சமயத்தில் முக்கிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் வேறு கட்சியில் இணைவது வழக்கம். இதற்காக, பல்வேறு இடங்களில் மாற்று அணியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் விழாவும் நடைபெறும். அந்த வகையில் அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், மருது அழகு ராஜா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். இவர்களை தொடர்ந்து, வைத்தியலிங்கத்தையும் திமுகவில் சேர்ப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது.

இவர்கள் திமுகவில் இணைந்தது ஸ்டாலினுக்கு மேலும் பலத்தை கூட்டினாலும் இது திமுக அமைச்சர்களுக்கு பெரிய சவாலாகவே அமைந்துள்ளது. ஏனென்றால், அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்கள் அனைவரும் முக்கிய அமைச்சர்கள் என்பதால், இவர்களுக்கு 2026 தேர்தலில் சீட் வழங்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் தற்போதுள்ள அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும். இவர்களின் வருகை திமுகவில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் திமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தற்போதுள்ள அமைச்சர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

Previous articleஇந்த தேர்தலில் அதிமுகவின் நிலை இது தான்.. வெளிவந்த கருத்து கணிப்பு!!
Next articleதவெகவை அட்டாக் செய்ய ஆரம்பித்த அதிமுக.. நாலா பக்கமும் மாட்டி தவிக்கும் விஜய்!!