BJP ADMK AMMK: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் அந்த எதிர்பார்ப்புக்கு சிறிதும் கலங்கம் வராமல், தமிழக கட்சிகள் அனைத்தும் தினம் தினம் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் முக்கியமாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, பாமகவில் ஏற்பட்ட தந்தை, மகன் பிரச்சனை, திமுகவில் நிலவும் கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகள், மற்றும் அதிமுகவில் ஏற்பட்ட பிரிவுகள் போன்றவை தேர்தளுக்கான ஆவலை மேலும் மெருகேற்றியுள்ளது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் தங்களுக்கு முறையான மரியாதை வழங்க படவில்லை என கூறி அமமுக அதிலிருந்து வெளியேறியது.
ஓபிஎஸ்யும் பாஜக கூட்டணியிலிருந்து விலகினார். இவர்களை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பதற்க்காக பல்வேறு பாஜக தலைவர்கள் முயற்சித்தும் இவர்கள் அதற்கு இணங்கவில்லை. முதல்வர் வேட்பாளரை மாற்றினால் தான் NDA கூட்டணியில் இணைவோம் என்று டிடிவி தினகரன் உறுதியாக இருந்தார். இவ்வாறான சூழலில், இவர்கள் மீண்டும் பாஜகவில் சேர்வதற்கான சமிக்கைகள் தென்படுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து தான் செங்கோட்டையன் வெளியேறியுள்ளார்.
டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீண்டும் NDA கூட்டணிக்குள் வருவார்களா என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சூசகமாக பதிலளித்துள்ளார். இவரின் இந்த கருத்து, செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் பாஜக உடன் இணக்கமாக தான் உள்ளார் என்பதை நிரூபித்ததோடு, NDA விலிருந்து விலகியவர்களுடன் மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்கபட்டுள்ளது என்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். மேலும் இவர்கள் அனைவரும் இபிஎஸ்க்கு எதிரானவர்கள் என்பதால் மீண்டும் NDA கூட்டணியில் இவர்கள் சேர்ந்தால் அது இபிஎஸ் தலைமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது.

