ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் கூட்டணிகளும், தொகுதி பங்கீடும் அனல் பறக்க தொடங்கியுள்ளது. எப்போதுமே தேர்தல் சமயத்தில் சொந்த கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும் மாற்று கட்சியில் இணைவது வழக்கம். அதிலும் இந்த முறை அது மிக அதிகமாக உள்ளது. அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் உருவாகி வரும் நிலையில், அந்த பிரிவுகளிலிருந்தும் சிலர் பிரிந்து அதிமுகவின் தீவிர அரசியல் எதிரியான திமுகவில் இணைந்துள்ளனர்.
மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா, மருது அழகு ராஜா, போன்ற முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது புதிதாக ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கமும் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்த தகவலை வைத்தியலிங்கம் முழுமையாக மறுத்துள்ளார். இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்ட வைத்தியலிங்கம், என்னை பற்றி பரவும் தகவல் அனைத்தும் பொய், எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களால் கட்டி காக்கப்பட்ட அதிமுகவை ஒருங்கிணைத்து மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைப்பது தான் என்னுடைய நோக்கம் என்று கூறியுள்ளார்.
திமுக உடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது, அதிமுகவில் நான் இணைய போகிறேன் என்று பரவும் தகவல் அனைத்தும் வதந்தி என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுகவில் அதிமுகவை சேர்ந்த பலர் இணைந்த நிலையில் வைத்தியலிங்கத்தையும் சேர்த்து விட்டால் திமுகவின் பலம் பெருகும் என்று ஸ்டாலின் திட்டமிட்ட நிலையில், இவரின் இந்த கருத்து ஸ்டாலினை ஏமாற்றமடைய வைத்துள்ளது. மேலும், ஓபிஎஸ் உடன் மீதமிருக்கும் ஒருவரையும் தன் பக்கம் சேர்த்து விட்டால் ஓபிஎஸ் தனி மரம் ஆகி விடுவார் என்று இபிஎஸ் திட்டம் தீட்டிய நிலையில் இந்த அசையும் நிறைவேறாமல் போய்விட்டது.

