TVK: தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில், இதற்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு பெருகியுள்ளது. இதனை கண்ட மாநில கட்சிகளனைத்தும் அதிர்ச்சியுற்றன. இதன் காரணமாக இவரை கட்சியில் இணைக்க வேண்டுமென பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. இவை எதற்கும் அசராத விஜய் அவரது பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.
தவெகவில் விஜய்யை அடுத்து அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா. கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் சரியாக செயல்படவில்லை என்றும், கரூர் சம்பவத்தின் போது விஜய் உடனிருந்து கட்சியை வழி நடத்தவில்லை என்றும் அவர் மீது பல புகார்கள் எழுந்தது. முக்கியமாக ஆனந்த் மீது எழுப்பபட்ட கழக குரல் ஆதவ் அர்ஜுனா ஆதரவாளர்களிடையே எழுந்தது. இதனால் இவர் கூடிய விரைவில் புஸ்ஸி ஆனந்த் இடத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் , கரூர் சம்பவதிற்கு பிறகு தவெக சார்பாக நடத்தப்பட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் பேசிய கருத்து விஜய்யை ஆத்திரமடைய செய்துள்ளது என்று தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. திமுகவிற்கு விஜய் ஆதரவு அளித்தார் என்ற கருத்தை ஆதவ் அர்ஜுனா கூறியும் அவரை ஏன் இன்னும் கட்சியிலிருந்து விஜய் நீக்காமல் உள்ளார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்நிலையில் அதற்கான காரணத்தை மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கூறியுள்ளார்.
ஆதவின் பேச்சு தவெகவிற்கு நன்மைகளை விட தீமைகளே அதிகம் பரிசளிக்கிறது. இப்படி இருக்க இவரை இன்னும் கட்சியிலிருந்து நீக்காமல் இருப்பதற்கான ஒரே காரணம் அவர் கட்சிக்காக நிறைய செலவு செய்வதாகும் என்று அவர் விளக்க மளித்துள்ளார். இவரின் இந்த கருத்து அரசியல் களத்திலும், தவெக ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் விவாதமாகியுள்ளது.

