CONGRESS VCK DMK: அடுத்த ஆறாவது மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், அரசியல் அரங்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆட்சி கட்டிலில் தொடர்ந்து அமர வேண்டுமென திமுகவும், இந்த முறையாவது ஆட்சியை பிடிக்க வேண்டுமென அதிமுகவும் தொடர்ந்து கலப்பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில் பீகாரில் நடந்த முடிந்த தேர்தலில் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதன் எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றி பெரும் தோல்வியடைந்துள்ளது.
இதன் காரணமாக திமுக கூட்டணி கட்சிகளிடம் காங்கிரஸ் அதன் மதிப்பை இழந்து விட்டது என்று கருத்து வலுபெறுகிறது. இதனால் திமுக கூட்டணியிலிருக்கும் விசிக முன்னிலை பெற்று வருகிறதாம். திமுக கூட்டணியில் மக்கள் செல்வாக்கு கொண்ட முதல் கட்சி விசிக தான் அப்படி இருக்கையில், அக்கட்சிக்கு மட்டும் குறைந்த தொகுதிகள் ஒதுக்குவதை விசிகவை சேர்ந்த பலரும் விமர்சித்து வந்தனர். இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்த திமுக தலைமை பீகார் தேர்தல் முடிவுகள் வரை பொறுத்திருந்து, தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளது.
அது என்னவென்றால், வழக்கத்திற்கு மாறாக காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கி விட்டு, விசிகவிற்கு அதிக தொகுதிகளை ஒதுக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். அதற்கு காரணம் பீகாரில் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு, தமிழகத்தில் செல்வாக்கு இல்லையென்பதால் இதற்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால் தமிழகத்திலும் மண்ணை கவ்வி விடுவார்கள் என்று திமுக நினைக்கிறது. தற்போது திமுக எடுத்திருக்கும் இந்த முடிவு, விசிகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று விசிக தொண்டர்கள் கூறுகின்றனர்.

