ADMK BJP: அடுத்த வருடம் நடைபெற போகும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளை விட அதிமுக மக்களை சந்திக்கும் பணிகளை முதலாவதாக தொடங்கி அதனை செயல்படுத்தியும் வருகிறது. மேலும் ஒரு வருடத்திற்கு முன்பே தேசிய கட்சியான பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்து விட்டது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் பாஜக பீகார் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பீகார் முடிவுகள் வெளியான கையோடு பாஜக தமிழக தேர்தலில் தீவிரமாக அடியெடுத்து வைத்துள்ளது. அந்த வகையில், பாஜக, அதிமுகவுடன் ஒரு டீலிங் செய்திருக்கிறது. அது என்னவென்றால், பாஜக பீகார் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என்பது தான். இதற்கு இபிஎஸ்யும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். தற்போது பாஜக வெற்றி பெற்று விட்டதால், இபிஎஸ்யிடம் கொங்கு மண்டலத்தை கேட்டு வலியுறுத்தி வருகிறதாம்.
கொங்கு மண்டலத்தை சேர்ந்த பலரும் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றதால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வாக்கு சிதற கூடும் என்ற வருத்தம் இபிஎஸ்க்கு இருக்கிறது. இப்படி இருக்கையில், தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத பாஜகவிற்கு கொங்கு மண்டலத்தை ஒதுக்கினால், அதிமுகவின் வாக்கு வங்கி மேலும் சரியக்கூடும். இதனால் இபிஎஸ் பாஜகவிடம் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழிக்கிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் தற்சமயம் இபிஎஸ் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டால், பாஜக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பும் உள்ளது என்று கூறப்படுகிறது.

