TVK BJP: எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை தமிழக அரசியல் களம் புதிய வேகமேடுதுள்ளது. இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் திமுக தலைமையிடம் சில நிபந்தனைகளை கேட்டு வலியுறுத்தி வருவதால் அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற நிலை உள்ளது. விஜய் தலைமையிலான தவெக தனது கூட்டணியை ஜனவரியில் தான் அறிவிப்பேன் என்றும், பாஜக அதிமுக உடன் கூட்டணி இல்லையென்றும் திட்டவட்டமாக கூறி விட்டார்.
கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து தவெகவின் குரலாக ஒலித்த எங்கள் கூட்டணியை வேண்டாமென்று விஜய் உதறி தள்ளி விட்டதால், பாஜகவும், அதிமுகவும் விஜய்யை நேரடியாக விமர்சித்து வருவது மட்டுமல்லாமல், அவரை பலி வாங்கும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், SIR தொடர்பான கூட்டங்கள், சட்டசபை தேர்தல் கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் போன்றவற்றிற்கு தவெகவை நிராகரிப்பதை அறிந்த விஜய், அந்த கூட்டங்களுக்கு எங்களையும் அழைக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தற்சமயம் பேசு பொருளான நிலையில், இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தலை சந்தித்து அங்கீகாரம் பெற்றால் தான் அழைப்பு கொடுப்பார்கள், இப்போது தான் நீங்கள் கட்சியை தொடங்கி இருக்கிறீர்கள். கட்சியின் செயல்பாடுகளை பொறுத்து தான் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து தவெக, பாஜக கூட்டணிக்கு வந்து விட்டால் எல்லா கூட்டங்களுக்கும் தானாக அழைப்பு வழங்கப்படும் இல்லையென்றால் இது தொடரும் என்பதை எச்சரித்தை போல உள்ளது என பலரும் கூறுகின்றனர்.

