MDMK BJP DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் திராவிட கட்சியான அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும் , ஆளுங்கட்சியாக உள்ள திமுக ஒரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பிலும் மக்களை சந்திக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் மூன்றாம் நிலை கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தீவிர ஆலோசனையில் உள்ளன. தவெகவின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை.
இந்நிலையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஸ்டாலினிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக திமுக கூட்டணிக் கட்சிகள் பிரியும் அபாயமும் உள்ளது என்று மதிப்பிடப்படுகிறது. இந்நிலையில் விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் நேரடியாக ஆட்சி பங்கை வலியுறுத்தி வரும் சமயத்தில், திமுக கூட்டணியிலிருக்கும் மதிமுக மறைமுகமாக சில வேலைகளை செய்து வருகிறது. இதனை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் மதிமுகவிலிருந்து பிரிந்த மல்லை சத்யா.
புதிய கட்சி துவங்க போவதாக அறிவித்த இவர், வைகோவிற்கு மத்திய அமைச்சராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால் அவர் பாஜக உடன் கூட்டணி சேர விரும்புகிறார் என்ற தகவலை கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து ஸ்டாலினுக்கு பேரிடியாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தற்சமயம் பாஜக மட்டுமே இருக்கும் நிலையில், பாமக, தேமுதிக உடன் கிட்ட தட்ட கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் மதிமுகவும் அதிமுக உடன் சேர்ந்தால் இந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

