BJP DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4, 5 மாதங்களே உள்ள நிலையில், மாநில கட்சிகளனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் கூட்டணி வியூகங்களை வலுப்பெற்று வரும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக மட்டுமே திமுகவை பிரதான எதிர்க்கட்சியாக வைத்து விமர்சித்து வந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது தவெகவும் இணைந்துள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்தது முதலே திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வருகிறார். ஆனாலும் பாஜகவை சேர்ந்தவர்கள் விஜய் கூட்டணி வேண்டுமென்று விஜய்யை விமர்ச்சிக்காமல் இருந்தனர்.
அவருக்கு பல்வேறு வகையில் உதவுவது போலவும் காட்டி கொண்டனர். அப்போதும் கூட விஜய் பாஜகவை விமர்ச்சிப்பதை கைவிடவில்லை. மேலும் கூட்டணிக்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜய்யை நேரடியாக விமர்சித்து, தவெக ஒரு கட்சியே இல்லையேன்று கூறி வந்தனர். இந்நிலையில் விஜய் பாஜகவை விமர்ச்சிப்பது குறித்து பேசிய தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவிற்கு சாதகமாகவும் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
தவெக வெற்றி பெற வேண்டுமென்றால், நீங்கள் மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தீர்கள், அடுத்த கட்டமாக என்ன செய்ய போகிறீர்கள் என்பதை தான் மக்கள் பார்ப்பார்கள், யாரை எதிர்கிறீர்கள் என்று யாரும் பார்க்க மாட்டார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பீகாரில் தோல்வியுற்ற பிரசாந்த் கிஷோர் நல்லவராக இருந்தாலும் சரி, கெட்டவராக இருந்தாலும் சரி, ஆட்சி மாற்றம் தேவையில்லை என்றால் எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறினார். இவரின் இந்த கருத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையில்லை என்று மக்கள் நினைத்தால் அதிமுக, தவெக போன்ற எந்த கட்சிக்கும் வாக்கு அதிகரிக்காது என்பதை அவர் வெளிப்படையாக கூறியுள்ளார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

