சுவாச மண்டலத்தை அடுத்து மூளையை குறிவைக்கும் கொரோனா வைரஸ்;?ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல்?

Photo of author

By Pavithra

சுவாச மண்டலத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது மூளையை மற்றும் நரம்பியல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு, அறிகுறிகளாக கூறப்படுபவை தொண்டை வலி, சளி, காய்ச்சல், வறட்டு இருமல், நெஞ்சு இறுக்கம், மூச்சுத்திணறல், வாந்தி, தலைவலி, சுவையை உணர முடியாத நிலை போன்றவை ஆகும்.இந்த அறிகுறியின் பட்டியலில் அடுத்ததாக மூளை பாதிப்பும் இணைந்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில், கொரோனா சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பலருக்கு மூளையில் வீக்கம், மயக்கம், வலிப்பு போன்ற பல பாதிப்புகள் இருப்பது ஆராய்சில் தெரிய வந்துள்ளதாக இந்தியாவின் முன்ணனி மருத்துவமனைகளில் பணியாற்றும் நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றன.
இது மட்டுமின்றி பலருக்கு நரம்பியல் சார்ந்த பிரச்சனைகளும் கொரோனாத் தொற்றின் அறிகுறிகளாக இருக்கிறது. என்று வல்லுநர்கள் கூறியுள்ளது மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.