DMK: தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை தங்களது தேர்தல் வேட்டையில் மூழ்கியுள்ளன. அதே போல் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவும் தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்று முயற்சித்து வருகிறது. ஆனால் தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து திமுகவின் கூட்டணி கட்சிகளும் சரி, வேறு எல்லா பிரச்சனைகளும் திமுகவிற்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.
இந்நிலையில் சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்ற இடங்களை பட்டியலிட்டு அங்கு திமுகவின் முக்கியமான இரண்டாம் கட்ட தலைவர்களை இறக்கி இந்த முறை அங்கு மாபெரும் வெற்றி பெற உழைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் தோல்வியுற்ற திமுக இம்முறை அங்கு வெற்றி பெற வேண்டுமென செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளது. கோவையில் மக்களை கவரும் பணிகளை செந்தில் பாலாஜி முழுவீச்சில் நடத்தி வருகிறார்.
கோவையில் அதிமுகவும், பாஜகவும் மாறி மாறி வெற்றி பெற்றாலும் இந்த முறை அது திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டுமென திமுக அரசு முயற்சித்த சமயத்தில் அதற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஒரு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்டுள்ளார். இந்த நிகழ்வு திமுக அரசு மீது மக்களுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இம்முறையும் திமுகவின் ஆசை நிராசையாக மாறும் என்பதில் எந்த ஐயமுமில்லை என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

