ADMK BJP: பீகாரை தொடர்ந்து தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று பலரும் கூறுகின்றனர். பீகாரில் NDA கூட்டணி யாரும் எதிர்பார்த்திராத அளவு மாபெரும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி தற்போது தமிழகத்தில் நடைபெற போகும் தேர்தலுக்காக திராவிட கட்சியான அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும் அதனை கருத்தில் கொள்ளாமல் தேர்தலை நோக்கி இருவரும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்நிலையில் பீகாரில் வெற்றி பெற்ற பாஜக தற்போது தமிழக தேர்தலில் முனைப்பை காட்ட தொடங்கியுள்ளது.
அந்த வகையில், அதிமுகவிடம் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதிலும் முக்கியமாக கொங்கு மண்டலத்தை அதிமுகவிடம் கேட்டு பெற வேண்டுமென பாஜக உறுதியாக உள்ளதாம். என்னதான் பீகாரில் பெரியளவில் பாஜக வெற்றி பெற்றாலும் அதற்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. இப்படி இருக்க பாஜகவிற்கு அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொண்டு மண்டலத்தை கொடுத்தால் அந்த பகுதியில் அதிமுக தோல்வியை தான் சந்திக்கும்.
அதிமுகவின் வாக்கு வாங்கி தற்சமயம் பிரிய தொடங்கியுள்ளதால், அது கொங்கு மண்டலத்தில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த சூழலில் கொங்கு மண்டலத்தை பாஜகவிற்கு ஒதுக்குவது சரியான முடிவு அல்ல என்று இபிஎஸ் யோசிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பீகாரில் வெற்றி பெற்றதை பகடை காயாக வைத்து பாஜக அதிமுகவிடம் சில நிபந்தனைகளை முன் வைத்து வருகிறது. இந்த நிபந்தனைகளுக்கு இபிஎஸ் சம்மதிக்கவில்லை என்றால் அதிமுக-பாஜக கூட்டணி பிரிய நேரிடலாம் என்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

