திமுகவின் பகடை காயாக மாறிய மல்லை சத்யா.. வைகோவின் பிளான் பி!!

0
106
Mallai Satya who became the dice of DMK.. Vaiko's plan B!!
Mallai Satya who became the dice of DMK.. Vaiko's plan B!!

DMK MDMK: ஆளுங்கட்சியாக உள்ள திமுக தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென போராடி வருகிறது. அதற்காக பல்வேறு வியூகங்களை பின் பற்றி வரும் திமுக, கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளையும் சமரசப்படுத்தி வருகிறது. அந்த வகையில் திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து பலரும் குரல் எழுப்பி வந்த நிலையில், இதனை கடுமையாக எதிர்த்த வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனி கட்சியை தொடங்கினார். பின்னர் யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவர்களுடனே கூட்டணி அமைத்து விட்டார்.

இந்நிலையில் மதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட மல்லை சத்யா, வைகோ உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து புதிய கட்சி ஆரம்பித்த மல்லை சத்யா அதற்கு திராவிட வெற்றிக் கழகம் என்று பெயர் சூட்டினார். இவரின் இந்த புதிய எழுச்சி, திமுகவின் சதி திட்டமாக இருக்கும் என்று பலரும் கூறுகின்றனர். ஏனென்றால் மதிமுகவிற்கு மத்திய அரசுடன் இணையும் ஆசை உள்ளது என்பது திமுகவிற்கு தெரியும். இதனை பாஜகவின் எல். முருகன் கூறியிருக்கிறார்.

மேலும் வைகோ குறித்து விமர்சனத்தை முன் வைத்த மல்லை சத்யா, வைகோவிற்கு பாஜக உடன் இணையும் ஆர்வம் உள்ளது என்று கூறியுள்ளார். இதனை அறிந்த திமுக மல்லை சத்யா மூலம் வைகோவிற்கு முடிவு கட்ட திட்டமிட்டுள்ளது என்று திமுக வட்டாரங்கள் கூறி வந்தன. இந்நிலையில் இந்த செய்தியறிந்த வைகோ, திமுக கூட்டணியிலிருந்து ஒரு வேளை மதிமுக வெளியேற்றப்பட்டாலோ அல்லது கூட்டணியில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றாலோ உடனடியாக பாஜக கூட்டணியில் சேர்ந்து விடுவதாக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleதிமுகவில் வெடித்த பூகம்பம்.. நாங்களும் அதிக தொகுதிகள் கேட்போம்!! தவிக்கும் ஸ்டாலின்!!