ஆதவ் அர்ஜுனா வழக்கில் திடீர் திருப்பம்.. உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

0
149
Sudden turn in the Aadhav Arjuna case.. Action order issued by the High Court!!
Sudden turn in the Aadhav Arjuna case.. Action order issued by the High Court!!

TVK: தமிழ் திரையுலகில் பிரபல நட்சத்திரமாக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றினார். இவருக்கு சினிமாவில் இருந்த ரசிகர் கூட்டம், அரசியலிலும் எதிரொலித்தது. தவெக சார்பாக 2 மாபெரும் மாநாடுகளையும், 5 பிரச்சார கூட்டமும் நடத்தப்பட்டது. இந்த இரண்டிற்கும் யாரும் எதிர் பார்த்திராத அளவு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிலையில் 6 வதாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த, மதியழகன், சி.டி.ஆர். நிர்மல் குமார் போன்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை அமைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தவெகவில் முக்கிய முகமாக அறியப்படும் ஆதவ் அர்ஜுனா, கரூர் சம்பவத்தை மையப்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து ன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், நேபாளம் மற்றும் இலங்கையில் நடப்பது போல தமிழகத்திலும் ஜென்சி புரட்சி வெடிக்கும் என்று கூறியதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டங்கள் எழுந்தன. இந்நிலையில் பொது அமைதியை கெடுக்கும் வகையில், கருத்து பதிவிட்டிருந்ததாக கூறி ஆதவ் அர்ஜுனா மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆதவ் அர்ஜுனா தரப்பிலிருந்து மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த , இந்த வழக்கு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்த போது ஆதவ் அர்ஜுனா தரப்பிலிருந்து, அந்த பதிவு சில மணி நேரங்களிலேயே நீக்கப்பட்டுவிட்டது. அந்த பதிவு கோபத்தின் வெளிப்பாடு மட்டுமே, இதற்கிடையில் எந்த வன்முறையும் நடைபெறவில்லை  என்று வாதிடப்பட்டது. இதனால் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கை நீதிமன்றம் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.

Previous articleதிமுகவின் பகடை காயாக மாறிய மல்லை சத்யா.. வைகோவின் பிளான் பி!!
Next articleஎங்களுக்கு ஓட்டு போட்டா மெட்ரோ ரயில் திட்டம் வரும்.. பளிச்சென்று கூறிய அதிமுக அமைச்சர்!!