
ADMK BJP DMK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக தேர்தல் களம் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திராவிட கட்சியாக அறியப்படும் அதிமுக மற்றும் திமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதிமுக பல அணிகளாக பிரிந்த நிலையில், திமுகவில் தொகுதி பங்கீடு, ஆட்சி அதிகாரம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன. எப்போதும் போல அதிமுக திமுகவையும், திமுக திமுகவையும் குறை கூறி வருகிறது.
இந்நிலையில் பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழகத்திலும் வெற்றி பெற வேண்டுமென போராடி வருகிறது. ஆனால் தமிழகத்தில் பாஜகவிற்கு போதிய செல்வாக்கு இல்லாததால், கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து அதிமுக-பாஜக ஆட்சிக்கு வந்த உடன் அந்த திட்டத்தை நிறைவேற்றி தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாமேன பாஜக திட்டம் தீட்டி இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.
இதனை பாஜகவின் மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனும் செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர், செல்லூர் ராஜுவும் இதே கருத்தை கூறி இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அவர், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் திமுக செய்யததை அதிமுக செய்யும். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை இபிஎஸ் தான் துவக்கி வைக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் தான் இந்த திட்டம் வரவேண்டுமென மதுரை சொக்கநாதர் நினைக்கிறார் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு தான் அனுமதி வழங்க வேண்டும் என்பதால், எங்களுக்கு ஓட்டு போட்டால் தான் மெட்ரோ ரயில் திட்டம் என்பது தமிழகத்தின் மீது மத்திய அரசு காட்டும் ஓரவஞ்சனை என திமுகவை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
