TVK PT: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. எப்போதும் இல்லாத அளவிற்க்கு மாறாக இந்த முறை அரசியல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் விஜய்யின் அரசியல் வருகை தான். இந்த முறை அதிமுக, திமுக, தவெக, நாதக போன்ற கட்சிகளிடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடங்ககளிளேயே திராவிட கட்சிகளுக்கு இணையாக போட்டியாக வந்தது விஜய் பார்த்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.
இதனால் விஜய் இணையும் கூட்டணி தான் வெற்றி பெரும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் விஜய் தவெக எந்தக் கூட்டணியிலும் இணையாது, கூட்டணிக்கு தவெக தான் தலைமை தாங்கும் என்று திட்ட வட்டமாக கூறி விட்டார். இது வரை விஜய் உடன் கூட்டணி சேர்வது குறித்து எந்த கட்சியும் பேசாத நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விஜய் கருத்தை முன் வைத்து பேசி இருப்பது, புதிய தமிழகம் -தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய போகிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அவர், பீகாரை போல தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமென கூறியுள்ளார். இது போன்று ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் புதிய தமிழகம் எந்த கட்சியுடன் கூட்டணி சேரும் என்பதை ஜனவரியில் அறிவிப்போம் என்று தெரிவித்தார். விஜய் அவர்கள் எங்களுடன் கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரம் தரப்படும் என்று கூறியதும், கிருஷ்ணசாமி கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று கூறியதும் ஒத்து போவதால் புதிய தமிழகம் தவெக உடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

