TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மாநில கட்சிகளனைத்தும் கூட்டணி கணக்குகளிலும், தொகுதி பங்கீட்டில் ஆர்வம் காட்டி வரும் சமயத்தில், பல்வேறு புதிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், அதிமுகவிலிருந்து பல முக்கிய தலைவர் இபிஎஸ்யால் நீக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவ்வாறான வேலைகள் அதிமுகவின் வாக்கு வங்கியை பாதிக்கும் என பலர் அறிவுறுத்தியும், தனது தலைமைக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தில் இபிஎஸ் இவ்வாறு செய்து வருகிறார் என அதிமுகவை சேர்ந்தவர்களும், பிரிந்து சென்றவர்களும் கூறி வந்தனர்.
இந்நிலையில் அதிமுக ஒன்றிணைய வேண்டுமென கூறிய செங்கோட்டையனை, முதலில் பதவிகளிலிருந்து நீக்கிய இபிஎஸ், பிறகு கட்சி தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார் என்று கூறி கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கினார். இவ்வாறு இபிஎஸ்க்கும், செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடு நீண்டு கொண்டே சென்றது. இந்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என அரசியல் களமே உற்று நோக்கி கொண்டிருந்தது. அப்போது தான் அவர் விஜய்யின் தவெகவில் இணைய போகிறார் என்ற செய்தி தீயாய் பரவியது. இந்த செய்தியை இரண்டு தரப்பும் மறுக்கவும் இல்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. இதனால் இவரின் இணைவு உறுதி என்றே கருதப்பட்டது.
பின்னர் இது குறித்து தவெகவை சேர்ந்த நிர்மல் குமாரிடம் கேட்ட போது, அதை பற்றி பின்னர் பேசி கொள்ளலாம் என்று கூறிவிட்டு சென்றார். இவரின் இந்த பதிலும், செங்கோட்டையன் தவெகவில் இணைய போகிறார் என்பதை உறுதிப்படுத்தியது. இது குறித்து செங்கோட்டையன் தரப்பு எந்த கருத்தும் கூறாமலிருந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த செங்கொட்டையனிடம் தவெகவில் இணைய போகிறீர்களா என்று கேட்ட போது, அதற்கு எந்த பதிலும் அளிக்கலாம் சென்றால், இந்த மௌவுனத்தை சம்மதமாக எடுத்து கொள்ளலாமா என்ற கேள்விக்கும், மௌனம் சாதித்தார். செங்கோட்டையனுக்கு தவெகவில் இணையும் எண்ணம் இல்லையென்றால் அதனை நேரடியாக கூறி இருக்கலாம், அதனை தவிர்த்து இவ்வாறு மௌனம் சாதிப்பது இவர் தவெகவில் இணைய போகிறார் என்பதற்கான சாத்திய கூறுகளாகவே பார்க்கப்படுகிறது.

