ADMK: சட்டமன்ற தேர்தலை நோக்கி கட்சிகள் அனைத்தும் செயல்பட்டு வரும் நிலையில், அதிமுகவில் மட்டும் உட்கட்சி பிரச்சனை தலை விரித்தாடுகிறது. இந்த பிரச்சனை ஜெயலலிதா இறந்த போது ஆரம்பித்தது, தற்போது வரை ஓயவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்றார். இதன் பின்னர் சில காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இவருக்கு பின் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். இவர் அதிமுகவின் தலைவர் பதவியை ஏற்றதிலிருந்தே அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவது மட்டுமல்லாது, இக்கட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விட்டது.
முதலில், சசிகலா, டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ், அடுத்ததாக ஓபிஎஸ்யும் நீக்கினார். இவர்களை தொடர்ந்து அதிமுக ஒன்றிணைய வேண்டுமென கூறிய செங்கோட்டையனையும் 2 மாதங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கினார். இவர்கள் நால்வரும் அதிமுகவின் முக்கிய முகங்கள் என்பதால், இவர்களின் நீக்கம் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கூறினர். இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக, மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமி ஒரு கருத்தை கூறியுள்ளார். மேலும் இவர்களின் நீக்கம் எத்தனை சதவிகிதம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், சசிகலா, டிடிவி தினகரனின் பிரிவு 7% வாக்குகளை பிரிக்கும் என்றும், ஓபிஎஸ் 13% வாக்குகளை பிரிப்பார் என்றும், செங்கோட்டையனுக்கு ஆதரவு அதிகளவில் இருப்பதால் அவர் தவெகவில் இணைந்தால் அவர் சுமார் 20% வாக்குகளை பிரிப்பார் என்று ரவீந்திரன் கூறியுள்ளார். ஏனென்றால், சசிகலா, ஓபிஎஸ்யால் முக்குலத்தோரின் வாக்குகளும், தினகரனால் தென் மாவட்டங்களில் சில தொகுதிகளிலும், செங்கோட்டையன் ஈரோட்டில் வலுவாக இருப்பதால், இந்த இடங்களிலெல்லாம் அதிமுக வாக்கு வாங்கி அடிபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

