ADMK DMK: இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்தியே வைத்திருக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்று பயணத்தையும், தொகுதி வாரியாக மாற்று கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல், 2021 தேர்தலில் திமுக தோல்வியுற்ற தொகுதிகளில் இந்த முறை வெற்றி பெற வேண்டுமென தொகுதி வாரியாக திமுகவின் முக்கிய அமைச்சர்களை நியமித்து, அங்கு மக்களை திமுக பக்கம் இழுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
பல ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொண்டு மண்டலத்தை, தம் பக்கம் ஈர்க்க வேண்டுமென திமுக போராடி வருகிறது. ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் இது நிராசையாகவே உள்ளது. இந்த முறை கொங்கு மண்டலத்தின் குறிப்பிட பகுதிகள் திமுக வசம் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுற்கு அதிமுகவே வழி அமைத்து விட்டது. அப்படி அரங்கேறிய நிகழ்வு தான் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கபட்டது. இவரை அதிமுகவின் அனைத்து பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் போன்ற எல்லாவற்றிலிருந்தும் நீக்கப்பட்ட போதிலிருந்தே, செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் திமுக காலூன்ற வேண்டுமென முயற்சித்து வருகிறது.
இப்படி இருக்கும் நிலையில், இன்று செங்கோட்டையன் தனது கோபி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது திமுகவிற்கு சாதகமாகிவிட்டது. செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீங்கியதால் ஈரோட்டில் அதிமுக தலைமை மீதும், கட்சியின் மீதும் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தி வாக்குகள் எல்லாம் திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகரிக்க செய்யும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது இதற்கான ஆயத்த பணிகளை விரைந்து செய்ய வேண்டுமென திமுக தலைமை உத்தரவிட்டிருக்கிறதாம்.

